Sample Text

Sample text

Social Icons

Blogger இயக்குவது.

Ads 468x60px

ASHTALAKSHMI

Social Icons

Followers

இந்த வலைப்பதிவில் தேடு

Featured Posts

RSS

முகப்பரு அழகைப் பாதிக்குமா?


ASHTALAKSHMI FANCY. WELCOME

ஆம், உண்மைதான். அழகு பாதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையும், எரிச்சல் போனறவையும் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுவும் முகப்பரு ‘ அடலசண்ட் ‘ பருவத்தில் ஏற்படுவதால் தோழிகளிடம் பழகுவதற்கே தயக்கம் ஏற்படும். தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் அதிகப்படியான கொழப்புகள், எண்ணெய் பசையாக வெளியேற்றுகிறது.
முகத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் இந்த எண்ணெய் பசையால் அடைக்கப்படுகின்றன. சருமம் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறது.இந்த எண்ணெய் பசையில் படும் தூசு, காற்று இவற்றினால் பரு உருவாகிறது.அடலசண்ட் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்பதினாலும், மலச்சிக்கலாலும் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு ஒரு வித தோல் வியாதியின் வகை என்றும் கூறலாம்.இந்த பருக்களை சொறிவதோ, கிள்ளுவதோ கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகவும், பருக்களின் வடுக்கள் நிரந்திரமாகத் தங்கி விடவும் வாய்ப்பு உண்டு.
ஓய்வில்லாமை, தவறான உணவுப்பழக்கம், போதைப் பொருள், மனக்கவலை போன்ற காரணங்களாலும் பருக்கள் தோன்றலாம். காலையில் போட்ட மேக்கப் கலைக்கப்படாமல் இருப்பதாலும் பருக்கள் உருவாகிறது. இரவு எந்நேரம் ஆனாலும் ‘ மேக்கப் ‘ ஐ கலைத்து விட்டு உறங்குவது என்ற நல்ல பழக்கத்தை கடைபிடிக்கலாம். தடுப்பு நடவடிக்கைகள்
வெள்ளரிக்காய்களை பச்சையாகவோ, சமைத்தோ அடிக்கடி சாப்பிடலாம். கீரைவகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைகிறது. இளநீர் அதிகம் பருகலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்து கொள்ள தயங்கக்கூடாது. அடிக்கடி மருந்து மாத்திரைகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படும்.
இதைத் தவிர்க்க எலுமிச்சை சாறுடன், சிறிது உப்பு, நீர் சேர்த்து பருகிவிட்டு, சிறிது காலாற நடக்கலாம்.
காலையில் சூரிய ஒளி படும்படி நிற்க , சூரிய ஒளி சக்தி பரு, கரும்புள்ளிகளை போக்குகிறது. பொடுகு இருந்தாலும் முகத்தில் பரு வரலாம்.
எனவே தலையை அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் வாரம் இருமுறை தலையை அலசி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
* 1 கிராம் புனுகு,1 அவுன்ஸ் நல்லெண்ணெய், சில துளி சந்தன தைலம் கலந்த கலவையைப் பஞ்சில் நனைத்து தடவலாம். விரல் நகம் படாமல் தடவ வேண்டும்.
* ஓரிஃபிளேம், ஆன்ட்டி பிளமிஷ் க்ரீமும் தடவலாம்.
* வேப்பிலை அரைத்து தடவி ஊறியவுடன் பயத்த மாவு தேய்த்துக் குளிக்கலாம்.
* வெள்ளரியை விழுதாக்கி குளிரவைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு, மஞ்சள்தூள் இவற்றுடன் நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கழுவவும்.
* முகத்தில் பரு உள்ளவர்கள் மென்மையான ‘ சோப் ‘ பையே உபயோகிக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை இளஞ்சூடான நீரில் முகம் கழுவலாம். எளிதான, அளவான உடற்பயிற்சி கூட அவசியம்.
* முகத்தில் பருக்கள் போன்ற ‘மரு’வும் தோன்றுகிறது. அதாவது கரும்புள்ளி, இவை மூக்கு, நெற்றி தாடைகளை உறைவிடமாக கொண்டுவரும் . இதுவம் பெரும்பாலும்
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையினால் தான் வரும்.
* இதில் தூசு படிந்து ஆரம்பத்தில் வெள்ளைப் புள்ளிகளாகவும், நாளடைவில் கரும்புள்ளிகளாகவும் மாறிவிடும். நாள்பட நாள்பட ஆழமான புண்ணாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.
இதற்கு ‘சிட்டி சோடியம் கார்பனேட்’ ஐ இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் துண்டை நனைத்து பிழிந்து ஆவியை மட்டும் கரும்புள்ளி உள்ள இடங்களில் ஒற்றி எடுக்கவும். இதனால் துவாரம் இறுக்கம் தளர்ந்து விரிவடையும்.
இப்போது தோலில் உள்ள தூவாரங்கள் அடைக்கப்பட வேண்டும் எப்படி-?
* முட்டையின் வெள்ளைக்கரு, மாய்ச்சரைஸ் க்ரீம் இரண்டையும் ஒன்றாக கலந்து தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* ஓட்ஸ் மாவுடன் தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சில துளிகள் கலந்து தடவி மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன்    குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* முல்தானி மட்டியுடன் நீர், வெள்ளரிச்சாறு கிடைக்காவிட்டால் எலுமிச்சை சாறு சிலதுளி கலந்து நன்கு குழைத்து முகத்தில் தடவவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நீங்களும் அழகிதான்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக